Loading . . .




2030ல் ஜவுளித் துறையில் ரூ.9 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு - பிரதமர் நரேந்திர மோடி

The Forecast 3 months ago தேசிய செய்திகள்

டில்லியில் நடைபெறும் பாரத் டெக்ஸ் -2025 கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, 2030ம் ஆண்டுக்குள் ஜவுளித் துறையில் ரூ.9 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.  

தற்போது இந்தியா 6வது இடத்தில் இருந்து ரூ.3 லட்சம் கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்கிறது. இதை மும்மடங்காக உயர்த்த பருத்தி உற்பத்தி வளர்ச்சிக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜவுளித் துறை நாட்டின் மொத்த உற்பத்தியில் 11% பங்கு வகிக்கிறது என்றும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனவும் அவர் கூறினார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News