
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை இன்று கூடுகிறது. மேலும் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், அமைச்சரவைக் கூடுவது முக்கியத்துவம் பெறுகிறது. தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்படவுள்ள தொழில்கள், விரிவாக்கப்படவுள்ள தொழிற்சாலைப் பணிகளுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். சில முக்கிய துறைகளில் கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பாா்க்கப்படுகிறது.
0 Comments