Loading . . .




வணிகவரி அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2.02 கோடி செலவில் 23 புதிய வாகனங்களை அமைச்சர் பி. மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்

The Forecast 3 weeks ago தமிழ்நாடு

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வணிகவரி அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2.02 கோடி செலவில் 23 புதிய வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வணிகவரித்துறை ஆணையர் முனைவர் டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., இணை ஆணையர் (நிர்வாகம்) மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

மேலும், அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டமும் நடைபெற்றது. 

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News