தமிழ்நாடு மின்வாரிய தலைவர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தலைமையில் மின்சிக்கனம் மூலமாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழி ஏற்ற மின் வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்
The Forecast 1 year ago டாக்டர்.ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப.
மின் வாரிய தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தலைமையில் உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி மின்சிக்கனம் மூலமாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் உறுதிமொழியை மின் வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர்.
உடன் மின் வாரிய காவல்துறை தலைவர் (விழிப்புணர்வு) பிரமோத் குமார், இ.கா.ப., தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநர் மரு. அனீஷ் சேகர், இ.ஆ.ப., தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநர் மரு. ஆல்பி ஜான் வர்கீஸ்.இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர்.
0 Comments