12 நாட்கள் நீண்ட ஈரான்-இஸ்ரேல் இடையிலான போர் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இப்போது, அதனைத் தொடர்ந்து, ஈரானின் அணுஆயுதத் திட்டங்களை இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்கியதன் விளைவாக, ஈரான் கடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் அணுசக்தி கண்காணிப்பு நிறுவனமான சர்வதேச அணுசக்தி அமைப்புடன் (IAEA) ஒத்துழைப்பை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் அறிவித்துள்ளார். இது, ஈரான் தனது அணுசக்தி தொடர்பான செயல்பாடுகளை வெளிநாட்டு கண்காணிப்பின்றி மேற்கொள்ளும் வாய்ப்பை உருவாக்கும் வகையில் இருக்கிறது. மேலும், சர்வதேச நாடுகள் இந்த நடவடிக்கையை கவலையுடனும் அச்சதுடனும் கவனித்து வருகின்றன.
0 Comments