Loading . . .




மதுரை எய்ம்ஸில் கட்டடம் வரும் ஜனவரி 2026ல் தொடங்குகிறது : மரு. எம். ஹனுமந்த ராவ் எம்.பி.பி.எஸ். அறிவிப்பு

Janani G 9 months ago மதுரை

2026 ஜனவரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு புதிய கட்டடம் செயல்பாட்டுக்கு வரும் என நிர்வாக அதிகாரி மரு. எம். ஹனுமந்த ராவ் எம்.பி.பி.எஸ். அறிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர், இந்த கட்டடத்தில் ஆய்வகம் (லேப்), விடுதி (ஹாஸ்டல்) மற்றும் 150 நோயாளிகளுக்கான படுக்கைகள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை 2027க்குள் முழுமையாக செயல்படும் என உறுதியளித்தார். தற்போது எய்ம்ஸ் மாணவர்கள் ராமநாதபுரத்தில் தற்காலிக வசதிகளுடன் கல்வி பயின்று வருகின்றனர்.

புதிய கட்டிடத் திட்டத்தின் மூலம் மதுரை எய்ம்ஸில் மருத்துவ சேவைகள் விரைவில் தொடங்கும் என்பதில் நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் தெற்குத் தமிழகத்தில் மேம்பட்ட சுகாதார வசதிகளை மக்கள் பெறக்கூடியதாக மக்கள் கருதுகின்றனர்.

0 Comments

Post your comment here

மதுரை Relateted News