Loading . . .




நாட்டின் பாதுகாப்புக்கு வலுசேர்க்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்

Janani G 7 months ago தேசிய செய்திகள்

அமெரிக்காவிலிருந்து இந்தியா பெற்றுள்ள அதிநவீன AH-64E அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள், இந்திய ராணுவத்தின் தாக்கும் திறனை பெரிதும் மேம்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். எல்லா வகையான நிலத்தோற்றங்கள் மற்றும் வெப்பநிலைகளிலும் செயல்படக் கூடிய இந்த ஹெலிகாப்டர்களில் ஹெல்பயர் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், ஒரு நிமிடத்தில் 128 இலக்குகளை கண்டறியும் திறனும், டிஜிட்டல் இணைப்புகள் மற்றும் துல்லியமான தாக்குதல் கண்காணிப்பு திறன்களும் இதில் இடம் பெற்றுள்ளன. பாதுகாப்பு வலுவை அதிகரிக்க இந்த ஹெலிகாப்டர்கள் முக்கிய பங்காற்றும் என பாதுகாப்பு வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. இந்திய ராணுவத்தின் முன்னோக்கி பாதுகாப்பு நடவடிக்கைகளில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News