Loading . . .




இஸ்ரோவின் விண்வெளி சாதனையில் புதிய மைல்கல்!

Janani G 5 months ago அறிவியல்

இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு இஸ்ரோ, விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியமான முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோளை 743 கி.மீ உயரத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி இஸ்ரோ பெரும் சாதனை புரிந்துள்ளது. 2,392 கிலோ எடையுடைய இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். பூமியின் 1 செ.மீ அளவிலான நகர்வையும் தெளிவாகக் கணிக்கக் கூடிய நுட்பத்துடன் 'நிசார்' வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, பூமி தொடர்பான பேரிடர் மேலாண்மை, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஞ்ஞான புள்ளிவிவரங்களை வழங்கும். இஸ்ரோவின் இந்த புதிய முயற்சி, இந்தியாவின் விண்வெளி துறையில் வளர்ச்சிக்கு ஒரு புதிய திசையைத் திறக்கிறது.

0 Comments

Post your comment here

அறிவியல் Relateted News

Latest News