தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் ஆலை தொடக்கம் : முதற் பயணமாக மின்காரில் முதல்வர் ஸ்டாலின் பயணம்
Janani G 7 months ago தமிழ்நாடு
தூத்துக்குடியில் நிறுவப்பட்ட வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியின் போது, தயாரிக்கப்பட்ட முதல் காரில் கையெழுத்திட்டு விற்பனையை தொடங்கிய அவர், எம்.பி. கனிமொழியுடன் இணைந்து அதே காரில் முதலாவதாக பயணமும் செய்தார்.
இந்த ஆலையில் ஆரம்ப கட்டமாக வருடத்திற்கு 50,000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் இது முக்கிய மைல்கல்லாக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments