இணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துள்ளது : சீன வெளியுறவு அமைச்சகம்
Janani G 10 months ago உலக செய்திகள்
இந்தியா (யானை) மற்றும் சீனா (டிராகன்) இணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துள்ளது என சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய வளரும் நாடுகளாக இருக்கும் இந்நாடுகள், பரஸ்பர வளர்ச்சிக்கும், நலன்களுக்கும் ஒற்றுமையாக செயல்படுவது தான் சிறந்த வழி எனவும் அது தெரிவித்துள்ளது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரிவிதிப்பும், பிரதமர் நரேந்திர மோடியின் சீனப் பயணங்களும் நிலவுகின்ற சூழலில், இரு நாடுகளும் உறவை வலுப்படுத்தி, பொருளாதார முன்னேற்றத்திற்காக சேர்ந்து செயல்பட வேண்டும் என்பது சீனாவின் கருத்தாகும்.
0 Comments