தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 வயது இளம் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார், உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 1,000 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் அவர் மிகுந்த திறமையுடன் பங்கேற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம், ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த சாதனை, தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் புதிய வரலாற்றை எழுதியுள்ளது. மேலும், இதே போட்டித் தொடரில் 500 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் அவர் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தனது அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான பயிற்சியால் உலக அரங்கில் இந்தியாவின் கீர்த்தியை உயர்த்தியுள்ளார்.
0 Comments