Loading . . .




இந்தி திணிப்புக்கு தடுப்பு : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

The Forecast 9 months ago தமிழ்நாடு

தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் இந்தி திணிப்பு அனுமதிக்கப்படமாட்டாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார். “அன்று முதல் இன்று வரை தமிழ்நாடு ஆதிக்கத்துக்கும், மொழி திணிப்புக்கும் நோ என்ட்ரி தான்” என்று அவர் வலியுறுத்தினார். மேலும், திமுகவின் தொண்டர்கள் உறுதியாக இருக்கும் வரை எந்த அரசியல் சக்தியும் கட்சியை அசைத்துக்கூட முடியாது என்றும் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் எனும் பொறுப்பை மறந்து, எடப்பாடி பழனிசாமி ஒருமையற்ற முறையில் பேசுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அதேசமயம், வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் மக்களின் வாக்குரிமையை பறிக்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக மக்களின் உரிமைகள், மொழி, கலாசாரம் மற்றும் ஜனநாயக அடிப்படைகளை திமுக அரசு எப்போதும் பாதுகாக்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News