Loading . . .




மின்சார வாகன சார்ஜிங் வசதி கட்டாயம்: தமிழக அரசின் புதிய விதி

The Forecast 4 weeks ago தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு, ஒருங்கிணைந்த கட்டட வளர்ச்சி விதிகளில் முக்கியமான திருத்தங்களை மேற்கொண்டு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்தத் திருத்தங்களின்படி, மாநிலத்தில் கட்டப்படும் அனைத்து புதிய குடியிருப்பு மற்றும் வணிக இடங்களிலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு சிறிய மற்றும் பெரிய கட்டிடங்கள் என அனைத்துக்கும் பொருந்தும். குறிப்பாக, 750 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பளவு கொண்ட குடியிருப்புகள் மற்றும் 300 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பளவு கொண்ட வணிக வளாகங்களுக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த முடிவானது பசுமைப் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News

Latest News