Loading . . .




காற்று மாசு, குளிர் இரண்டும் வாட்டும் தலைநகராக மாறும் டெல்லி

Janani G 7 months ago தமிழ்நாடு

இந்தியத் தலைநகர் டெல்லியில் மக்கள் ஒருபக்கம் கடுமையான காற்று மாசு, மறுபக்கம் குளிர் என இரட்டைச் சவாலைச் சந்தித்து வருகின்றனர். டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் காற்றின் தரக்குறியீடு (AQI) மோசமான அளவிலேயே பதிவாகி, சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

இந்தச் சூழலில், வடமேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் தாக்கத்தால் தலைநகரில் குளிர் வாட்டத் தொடங்கியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 11°C ஆகப் பதிவாகியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள கணிப்பின்படி, அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு இந்தக் குளிர் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், டெல்லி மக்கள் சுவாசிக்கச் சுத்தமான காற்று இன்றியும், குளிரைத் தாங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News