Loading . . .




திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெருமளவு பயனடைந்துள்ளது : எலான் மஸ்க் பாராட்டு

Janani G 5 months ago உலக செய்திகள்

டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க், திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெருமளவில் பயனடைந்துள்ளதாகப் பாராட்டியுள்ளார். சமீபத்தில், Zerodha  இணை நிறுவனர் நிகில் காமத் உடனான ஒரு பாட்காஸ்ட் உரையாடலில் அவர் இந்த கருத்தைத் தெரிவித்தார்.

மேலும், வெளிநாட்டினர் தங்கள் வேலைவாய்ப்புகளைத் திருடுவதாக அமெரிக்கர்கள் கருதுவதாகத் தனக்குத் தோன்றவில்லை என்றும் அவர் கூறினார். திறமையான ஊழியர்களுக்கான தேவை உலகளவில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும் என்று சுட்டிக்காட்டிய அவர், H-1B விசா நடைமுறையில் சில முறைகேடுகள் நடப்பதாகவும் குறிப்பிட்டார். இருப்பினும், இந்தியத் திறமையாளர்களின் பங்களிப்பை அவர் வெகுவாக அங்கீகரித்துள்ளார்.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News