Loading . . .




மோடியின் மலேசிய பயணம்: ஒப்பந்தங்களும் கலாச்சார சாதனையும்

The Forecast 5 months ago உலக செய்திகள்

இரண்டு நாள்கள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மலேசியா செல்ல உள்ளார். இந்தப் பயணத்தின் போது, இந்தியா–மலேசியா இடையே செமிகண்டக்டர், சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது இரு நாடுகளின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மோடி வருகையை முன்னிட்டு கோலாலம்பூர் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 800 கலைஞர்கள் ஒரே மேடையில் ஐந்து நிமிடங்கள் நடனமாடி மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற உள்ளனர். அரசியல்–கலாச்சாரம் இணையும் இந்தப் பயணம், இந்தியா–மலேசிய உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News