Loading . . .




இந்தியாவுக்கு சாதகமான அமெரிக்க வரி தளர்வு

Janani G 5 months ago உலக செய்திகள்

இந்திய பொருட்கள் மீதான கூடுதல் இறக்குமதி வரியை குறைக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் Donald Trump கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, முன்பு விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத கூடுதல் வரி நீக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், அமெரிக்காவிலிருந்து தொழில்நுட்பம், விவசாயப் பொருட்கள் மற்றும் நிலக்கரி உள்ளிட்டவற்றை சுமார் 500 பில்லியன் டாலர் அளவில் வாங்க இந்தியா சம்மதம் தெரிவித்திருந்தது. இந்த முடிவு இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு வளர்ந்து, இந்திய ஏற்றுமதிக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News