போரில் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்த நிலையில், ஈரானின் புதிய உயர் தலைவராக அவரது மகன் முஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அயதுல்லா கமேனியின் இரண்டாவது மூத்த மகனான முஜ்தபா கமேனி, நாட்டின் முக்கிய மத மற்றும் அரசியல் வட்டாரங்களில் பல ஆண்டுகளாக செல்வாக்கு கொண்டவர் என்று கூறப்படுகிறது. இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை வழங்கிய ஆதரவு மற்றும் அழுத்தத்தின் பேரில், ஷியா மதகுருக்கள் அவரை புதிய உயர் தலைவராக தேர்ந்தெடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானில் பரம்பரை ஆட்சி முறை பொதுவாக எதிர்க்கப்படும் நிலையில், இந்த முடிவு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. புதிய தலைவரின் கீழ் நடைபெற்று வரும் போர் சூழலின் மத்தியில் ஈரான் எவ்வாரு செயல்படும் என்பதைக் உலக நாடுகள் கவனித்து வருகின்றன.
0 Comments