Loading . . .




மிச்சிகனில் சூறாவளி தாக்கம்: 4 பேர் உயிரிழப்பு

Janani G 4 months ago உலக செய்திகள்

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் வீசிய சக்திவாய்ந்த சூறாவளி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணிக்கு சுமார் 241 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய இந்த சூறாவளியால் பல வீடுகள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பல இடங்களில் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்த இயற்கை பேரழிவில் 4 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சூறாவளி தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவசர சேவை குழுக்கள் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், சூறாவளியின் தாக்கத்தை காட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

0 Comments

Post your comment here

உலக செய்திகள் Relateted News