வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. முக்கிய குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று வர்த்தகத்தில் 1,271 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இதன் விளைவாக, நாள் முடிவில் முதலீட்டாளர்களுக்கு மொத்தமாக சுமார் ₹30 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் உலகளாவிய போர் பதற்றம் ஆகியவை இந்த வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. பல துறைகளில் உள்ள பங்குகள் அழுத்தத்தை சந்தித்த நிலையில், விமான சேவை நிறுவனமான IndiGo பங்குகள் சுமார் 8 சதவீதம் வரை குறைந்தன.
இந்த சரிவு முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சந்தையின் அடுத்தகட்ட நகர்வுகளை அனைவரும் கவனித்து வருகின்றனர்.
0 Comments