மேற்கு ஆசிய பதற்றம்: ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி பேச்சு
Janani G 2 months ago உலக செய்திகள்
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உடன் தொலைபேசியில் பேசி ஆலோசனை நடத்தினார்.
இந்த உரையாடலில் அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம், பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் பொதுக் கட்டமைப்புகள் சேதமடைந்தது குறித்து பிரதமர் கவலை தெரிவித்தார். மேலும் அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் இந்தியாவின் முக்கிய முன்னுரிமை என அவர் வலியுறுத்தினார்.
அதேபோல் பொருட்கள் மற்றும் எரிசக்தி வளங்களின் தடையற்ற போக்குவரத்தும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட மோதல்களின் காரணமாக முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் தாக்கம் ஏற்படும் நிலை உள்ளது.
இந்த சூழ்நிலையில் பிரச்சினைகளை அமைதியான பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் மூலம் தீர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதன் மூலம் அந்தப் பகுதியில் அமைதி நிலை மீண்டும் நிலைநிறுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
0 Comments