ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும்: ஈரான் புதிய உச்சத் தலைவர் அறிவிப்பு
The Forecast 4 weeks ago உலக செய்திகள்
ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனி ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும் என்று அறிவித்துள்ளார்.
புதிய உச்சத் தலைவராக பதவி ஏற்ற பிறகு வெளியிட்ட முதல் பொதுக் கருத்தில் அவர் இதை தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட போர் காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு எதிரிகளிடம் இழப்பீடு கோரப்படுமெனவும் அவர் கூறினார். இழப்பீடு வழங்கப்படாவிட்டால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
மேலும் அண்டை அரபு நாடுகள் தங்களது பகுதிகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை விரைவில் மூட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். போரில் உயிரிழந்தவர்களின் இரத்தத்திற்கு பதிலடி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் உச்சத் தலைவர் அலி காமெனி கடந்த பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததைத் தொடர்ந்து முஜ்தபா காமெனெய் இந்த பதவியை ஏற்றார்.
இந்த சூழ்நிலையில் மேற்கு ஆசியப் பகுதியில் பதற்றம் தொடர்ந்து நிலவி வருவதால் உலக நாடுகள் நிலைமையை கவனித்து வருகின்றன.
0 Comments