போரின் பொருளாதார தாக்கம் நீடிக்கும்: பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறு அழைப்பு
Janani G 3 months ago உலக செய்திகள்
மேற்கு ஆசியப் போரின் பொருளாதார தாக்கம் இன்னும் பல மாதங்கள் நீடிக்கும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஆந்தனி அல்பனீஸ் எச்சரித்துள்ளார்.
ஏப்ரல் 1, 2026 அன்று நாட்டுக்கு வழங்கிய சிறப்பு உரையில், எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார். ஹோர்முஸ் நீரிணை பாதிப்பு மற்றும் போரின் தாக்கம் காரணமாக எரிபொருள் விநியோகம் சிரமத்தை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆஸ்திரேலியா தனது எரிபொருள் தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி செய்வதால் இந்த தாக்கம் அதிகமாக உள்ளது.
மக்கள் தேவைக்கு மீறி எரிபொருள் சேமிக்காமல் இருக்கவும், முடிந்தவரை பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தவும் அவர் கேட்டுக் கொண்டார். இது சமூகத்தின் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.
அரசு எரிபொருள் வரியை குறைக்கும் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. பொருளாதார அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் சிறு தொழில்களுக்கு கடன் வசதிகள் எளிதாக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த சவால்களை ஒருங்கிணைந்த முயற்சியால் சமாளிக்க முடியும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
0 Comments