ஹெச் ஒன் பி விசா விண்ணப்ப கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த கட்டண உயர்வு சட்டத்திற்கு புறம்பானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் திறமையான வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் அவர்களை பணியமர்த்தும் நிறுவனங்களை பாதித்த முக்கிய கொள்கை மாற்றம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்ற வெளிநாட்டு நிபுணர்கள் பெருமளவில் ஹெச் ஒன் பி விசாவை பயன்படுத்தி வருகின்றனர். எனவே கட்டண உயர்வு அறிவிப்பு வெளியானபோது அது பரவலான கவனத்தை பெற்றிருந்தது.
நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ட்ரம்ப் தனது அதிகார வரம்பிற்குள் செயல்பட்டதாகவும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் அமெரிக்க குடியேற்ற கொள்கைகள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த விசா நடைமுறைகள் குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை தொழில் துறையினரும், குடியேற்ற நிபுணர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இந்த தீர்ப்பு குடியேற்றம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான கொள்கைகளில் நீதித்துறையின் முக்கிய பங்கை மீண்டும் வெளிப்படுத்திய முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
0 Comments