அமைச்சர் .ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்,
The Forecast 4 years ago பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (19.5.2022) எழிலகத்தில்,
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் .ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள், பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், விடுதிகள் மற்றும்
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் நிருவாகம் குறித்தும், இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) மற்றும் அனைத்து மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர் திரு.துறைமுகம் காஜா, பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.ஆ.கார்த்திக், இ.ஆ.ப.,
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் .அனில் மேஷ்ராம், இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சிறப்பு செயலர் .வா.சம்பத், இ.ஆ.ப., மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மாபினர்
நலத்துறை ஆணையர் முனைவர் மா.மதிவாணன், இ.ஆ.ப., தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக
மேலாண்மை இயக்குநர் முனைவர் இரா.நந்தகோபால், இ.ஆ.ப., மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments