Loading . . .




தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஆய்வு கூட்டம்

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

 


(01.06.2022) தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர்

மேலாண்மைத் துறை சார்பில் தென்மேற்கு பருவமழை குறித்த ஆயத்த பணிகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்

நடைபெற்றது. புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கூறியதாவது: பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு, குறுகிய, நடுத்தர, நீண்டகால வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாலங்கள், மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும். குளங்களின் கரைகளைப் பலப்படுத்த வேண்டும். வெள்ள காலங்களில் உபரி நீரை வெளியேற்றும் போது அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த ஆய்வுக் கூட்டத்தில், பல்வேறுத் துறை அரசு செயலாளர்கள், சம்மந்தப்பட்ட துறைத் தலைவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி

ஆணையர், இராணுவம், விமானப்படை, கப்பற்படை, கடலோர காவல்படை, இந்திய வானிலை ஆய்வு மையம், ஒன்றிய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட ஒன்றிய அரசுத் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News