முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சை செய்துகொண்ட மாணவ, மாணவிகளுடன் அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்துரையாடினார்
The Forecast 3 years ago நாமக்கல்
நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தின் புதிய மருத்துவமனை கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்வில், பள்ளி சிறார்
நலவாழ்வு திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு
அறுவை சிகிச்சை செய்துகொண்ட மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் மருத்துவம் மற்றும்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன் அவர்கள் கலந்துரையாடினார். மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.ஸ்ரேயா பி. சிங்., இ.ஆ.ப., அவர்கள், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள்,
நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எ.கே.பி.சின்ராஜ் அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள்,
சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.பொன்னுசாமி அவர்கள், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள்,
மருத்துவக்கல்வி இயக்குநர் மரு.நாராயணபாபு அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.
0 Comments