ஆன்லைன் ரம்மி அதிரடி தடை- தற்கொலையை தூண்டும் கொலை களம் - தலைமைச் செயலாளர் முனைவர் வே.இறையன்பு.இ.ஆ.ப.
Arut Selvan 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
தமிழகத்தில் தற்போது ஆட்கொண்டு வரும் பெரிய நோயாக தமிழக மக்களின் வாழ்க்கையை சீரழித்து சாவை சந்திக்க வைக்கிறது.
கடந்த காலங்களில் லாட்டரி மக்களின் வாழ்க்கையை பாழாக்கியது அதற்கு தடை வந்தபின் தற்போது ஆன்லைன் ரம்மி அந்த இடத்தை பிடித்ததுள்ளது ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக முன்னனி நடிகர்கள் விளம்பரங்கள் செய்வது மிகவும் வருந்தத்தக்கது.
இதனுடைய நுணுக்கமே முதலில் ரம்மி ஆடுவோரின் கணக்கிற்கு ஜெயித்தது போல் பணம் வரவு வைக்கப்படுகிறது இப்படியே பலமுறை செய்தபின் அடுத்தடுத்து கடன் வாங்கி லட்சக்கணக்கில் வைத்து ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டு முடிவில் பணத்தையும் இழுந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். தமிழகத்தில் ஒரு வருடங்களில் சுமார் 40 பேருக்கு மேல் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஆட்சியில் தடை செய்ய சட்டம் இயற்றினர். ஆனால் இதை எதிர்த்து வழக்கு தொடரப் பட்டு பிறகு நீதிமன்றத்தால் வலுவான சட்ட நுணுக்கங்களை கொண்டு சட்டம் இயற்றச் சொல்லி தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இதை தடைசெய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.
அது தற்போது தன்னுடைய அறிக்கையை தமிழக அரசிடம் அளித்துள்ளது.
அதன் அடிப்படையில் தமிழக அரசு தலைமைச் செயலாளர் முனைவர் வே.இறையன்பு இ.ஆ.ப., தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆன்லைன் தடை செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு விரைவில் தடை செய்யப்படும் என்று தலைமைச் செயலாளர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திர ரெட்டி, காவல் துறை தலைமை இயக்குநா் சை.சைலேந்திர பாபு, முதல்வரின் முதன்மைச் செயலாளா் த.உதயசந்திரன், வருவாய்த் துறை முதன்மைச் செயலாளா் குமாா் ஜெயந்த், சட்டத் துறைச் செயலாளா் கோபி ரவிக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்
0 Comments