Loading . . .




முனைவர் வே.இறையன்பு இளைஞர்களின் களங்கரை விளக்கம் சிறப்பு பார்வை

Arut Selvan 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஆனால் பிறந்த குழந்தையை பெற்றோர்கள் ஒரு குறிப்பிட்ட வயது வரை எப்படியோ வளர்த்து விடுகின்றனர். ஆனால் வாலிப வயது வந்தவுடன் பொருளாதாரத்தில் நன்றாக இருப்பவர்கள் தன் குழந்தையை நன்றாக படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேற்றி விடுகின்றனர். ஆனால் பொருளாதாரத்தில் பின் தங்கியிருப்பவர்கள்,  படிக்க வைக்க வசதி இல்லாதவர்கள் தங்கள் பிள்ளைகளை சிறு வயதில் கூலி வேலைக்கு அனுப்பி விடுவார்கள். இதனால் அந்த வாலிப பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை இழந்து விடுகின்றனர். இப்படிப்பட்ட வர்களுக்கு யாராவது உதவி செய்தால்தான் அவர்கள் தங்கள் வாழ்க்கையை உயர்த்தி கொள்ள முடியும். திக்கற்ற வர்களுக்கு தெய்வமே துணை என்ற வார்த்தையின்படி இப்படிப் பட்டவர்களின் வாழ்க்கை உயர்த்த வந்தவர்களில் ஒருவர்தான் தமிழக அரசு தலைமைச் செயலாளர் முனைவர் வே இறையன்பு. இ.ஆ.ப., 

தன்னுடைய பெயரிலே  இறைவனின் அன்பு என்பதை கொண்டு உள்ளார்.

 1.குழந்தையை தன் தாய் பாசம் காட்டி வளர்ப்பது இயற்கை

2. நண்பர்கள் தங்கள் நண்பர்களுக்கு உதவுவது இயற்கை

ஆனால் முன் பின் தெரியாத ஒருவருக்கு வாழ்க்கையை உயர்த்த உதவி செய்வதுதான் அதுவும் உணவு அளிப்பது அல்ல கல்விக் கண்ணை திறப்பது தான். அதனால்தான் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்  என்று அழைக்கப்படுகிறது.  அந்த இறைவனின் அன்பை இந்த இறையன்பு கொண்டதால் இதை செய்ய முடிகிறது.

தனக்கு திராணி இருக்கும் போது உதவி செய்ய வில்லை என்றால் பாவம் என்று சொல்லப் படுகிறது.முனைவர் வே இறையன்பு. இ.ஆ.ப., 

தான் படிக்கும் காலத்தில் இருந்தே பலருக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டவர்.  தான் இந்திய ஆட்சிப் பணியில் வெற்றி பெற்று மாவட்ட ஆட்சியர் பணியில் சேர்ந்த பின், மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சொல்லவா வேண்டும்? 

ஆம்,  வலது கை செய்வது இடது கைக்கு தெரியக் கூடாது என்ற வார்த்தையின் படி இவர் தன் வாழ்நாளில் பல ஏழை எளிய மக்களின் பிள்ளைகளை இந்தியாவின் தலை சிறந்தவர்களாக உருவாக்கி உள்ளார். எடுத்துக்காட்டாக .

நரிக்குறவர்களின் வாழ்க்கை மேம்பட வீடுகள் கட்டித்தரும் திட்டம் மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்வி ஆகியவற்றில் அதிக கவனம் எடுத்துக்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியராக செயல்பட்ட நேரத்தில் நெசவாளர்களின் குழந்தைகள், குழந்தை தொழிலாளராக மாறாமல் கல்வியை தொடர்வதை கண்காணித்தார். பள்ளிகளில் இடைநின்ற குழந்தைகளை கண்காணித்து, சிறப்பு வகுப்புகள் நடத்தி மீண்டும் குழந்தைகள் பள்ளிகளில் சேரவேண்டும் என்பதில் வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் படிக்க ஆசைப்பட்ட பலருக்கு இறையன்பின் புத்தகங்கள் மற்றும் சொற்பொழிவுகள் உத்வேகத்தை கொடுத்தது என்பதை மறுக்க முடியாது.

கண்ணகிநகர் பகுதியில், தமிழக தலைமை செயலாளர் இறையன்பு பல மாற்றங்களை கொண்டுவந்து முதல் பட்டதாரிகளையும், சாதனையாளர்களையும் உருவாக்கி வருகிறார்.

இங்கு வசிக்ககூடிய மக்கள் தினக்கூலி வேலை செய்பவர்களாக உள்ளனர். பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள இப்பகுதி குழந்தைகளால் பள்ளி படிப்பை முடித்துவிட்டு மேற்கொண்டு கல்லூரி படிப்பை தொடர முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு  முயற்சியால் பல முதல் பட்டதாரிகள் கண்ணகிநகர் பகுதியில் உருவாகி வருகின்றனர்.

தலைமைச் செயலாளர் வே.இறையன்பு. இ.ஆ.ப.,  வழிகாட்டுதலின்படி டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் மூலம் கண்ணகிநகர் பகுதியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படுள்ளது.

மாணவர்களுக்கு மாலை நேர பயிற்சி வகுப்புகள், பறைஇசை, கராத்தே, குத்துச்சண்டை, யோகா, சிலம்பம், கபடி, வாலிபால், சதுரங்க விளையாட்டு, கேரம்போர்டு, மியூசிக் போன்ற பல்வேறு பயிற்சிகள்  முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு  வருகிறது.

தலைமை செயலாளர் உதவிக்கரம் நீட்டும் அனைவரும் பொருளாதாரத்திலும், கல்வியிலும் மிகவும் பின்தங்கிய பெற்றோர்களின் பிள்ளைகள் அனைவரும் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பதும், இதில் அதிகப்படியாக மாணவிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிலர் தாய், தந்தை இழந்தவர்கள் மதிப்பெண்கள் மிக குறைவாக இருந்தாலும் அவர்களை கல்லூரியில் சேர்த்து வைப்பதுடன் முழு கல்வி செலவையும் ஏற்றுக்கொண்டு படிக்க வைத்துக் கொண்டு வருகிறார்

இப்படி ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் அதிகாங்களை பயன்படுத்தி உதவி செய்தால், பலருடைய வாழ்க்கை ஒளி பெறும்.


0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News