13 முதல் ஆகஸ்ட் 15 வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற தலைமைச் செயலாளர் முனைவர்.வெ.இறையன்பு,இ.ஆ.ப., தேசிய கொடிகளை வழங்கினார்
The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டத்தில் 75வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா
கொண்டாட்டத்தை தொடர்ந்து ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்ற
நோக்கத்தின் அடிப்படையில் திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் (14.08.2022)
தேசிய கொடிகளை தலைமைச் செயலாளர் முனைவர்.வெ.இறையன்பு,இ.ஆப., அவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுக்கு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் டாக்டர்.தாரேஸ் அஹமது.இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்
டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ்,இ.ஆ.ப.. அவர்கள் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.பா.சீபாஸ் கல்யாண்,இ.கா.ப., மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திருமதி.கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குநர் திரு.வை.ஜெயக்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.ரூபேஷ், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்
திரு.கே.எம்.எஸ்.சிவக்குமார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.வாசுதேவன் மற்றும் திரு.நடராஜன். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர்
திரு.கண்ணன், ஊராட்சிமன்ற தலைவர் திருமதி.அமிர்தம், துணைத் தலைவர் திருமதிரேவதி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
0 Comments