Loading . . .




தங்கப் பத்திர முதலீட்டில் தஞ்சை தலைமை அஞ்சலகம் சாதனை : சாதனையாளர்களுக்கு பரிசு வழங்கும் விழா

Arut Selvan 3 years ago அஞ்சலக செய்திகள்

தங்கப் பத்திர முதலீட்டில் தஞ்சை தலைமை அஞ்சலகம் சாதனை :சாதனையாளர்களுக்கு பரிசு வழங்கும்  விழா:

இந்திய ரிசர்வ்  வங்கி, தங்கப் பத்திர முதலீட்டு திட்டத்தினை கடந்த வாரம் 22.08. 2022 முதல் 26.08.2022 வரை வெளியிட்டது, இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்திலும் இத்திட்டத்தின் மூலமாக முதலீடு பெறப்பட்டது.

தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில், தலைமை அஞ்சலகத்தில் மட்டும், கடந்த வாரம் 22.08.2022 முதல் 26.08.2002 வரை  5 நாட்களில் 1608 கிராம் முதலீடு செய்யப்பட்டு, ரூ.83.56 இலட்சம் பெறப்பட்டுள்ளது. இதனையொட்டி, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் இன்று  29.08.2022, தஞ்சாவூர் அஞ்சலக கோட்ட முதுநிலை  கண்காணிப்பாளர் . R. குஞ்சிதபாதம் அவர்களின் தலைமையில், தங்க பத்திர முதலீட்டு திட்டத்தில் அதிக அளவில் வணிகம் செய்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் முன்னதாக தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தின் துணை அஞ்சலக தலைவர் திரு. M. குழந்தை -ராஜ், வரவேற்புரை வழங்கினார். தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தின் முதுநிலை அஞ்சலக தலைவர் . ச.அருள்தால் அவர்கள் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியின் நிறைவாக . K. சரவணன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இச்சாதனையை தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தின் அனைத்து ஊழியர்களும் இணைந்து கூட்டு முயற்சியாக செயல்பட்டு நிகழ்த்தியுள்ளனர். அனைத்து நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தின் முதுநிலை அஞ்சலக தலைவர் . அருள்தாஸ் அவர்களுக்கு, தஞ்சாவூர் அஞ்சலக கோட்டத்தின் முதுநிலை கண்காணிப்பாளர் . R. குஞ்சிதபாதம் பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கிய போது எடுத்த படம் ( அருகில் உதவி கண்காணிப்பாளர்கள் திரு. பிரேமானந்த்,  உமாபதி மற்றும் துணை அஞ்சலக தலைவர்  குழந்தைராஜ் உள்ளனர்)

0 Comments

Post your comment here

அஞ்சலக செய்திகள் Relateted News