Loading . . .




அமைச்சர் .எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் கரும்பு விவசாய பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்கூட்டம்

The Forecast 3 years ago வேளாண்மைத் துறை

எம்.ஆர். கிருஷ்ணர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலையில்  வேளாண்மை உழவர்

நலத்துறை அமைச்சர் .எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் கரும்பு

விவசாய பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்கூட்டம்.கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் உள்ள எம்.ஆர். கிருஷ்ணர்த்தி கூட்டுறவு சர்க்கரை

ஆலையில் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.

பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் வேளாண்மைத்துறை சிறப்பு செயலாளர் திரு.டி.ஆபிரகாம்,

இ.ஆ.ப.,அவர்கள், வேளாண்மைத்துறை இயக்குநர் திரு.அண்ணாதுரை, இ.ஆ.ப.,அவர்கள், கூடுதல்

ஆணையர் (சர்க்கரைத்துறை) திரு.த.அன்பழகன்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்

திரு.கி.பாலசுப்ரமணியம், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் விவசாய பிரதிநிதிகளுடன்

ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தவர்களின்

வாரிசுதாரர்கள் 6 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினையும், தஞ்சாவூர்

அறிஞர் அண்ணா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த வாரிசுதாரர்கள் 9 நபர்களுக்கு

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினையும் மாண்புமிகு வேளாண்மை உழவர்

நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்

அறிவிக்கப்பட்டு அதன் மூலம் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எதிர்வரும் 2022-23 அரவைப்

பருவத்திற்கு 11,411 பதிவு செய்யப்பட்டு, 3.50 லட்சம் டன்கள் அரவை செய்ய

திட்டமிடப்பட்டுள்ளது. எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய

விவசாயிகளின் வாழ்வாதாரம் ஏற்றம் பெற இடைநிலை உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு

ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 2021-22 அரவைப் பருவத்தில் 2,10,464 டன்கள் கரும்பை

நமது ஆலையில் அரவை செய்யப்பட்டு மத்திய அரசு பரிந்துரை விலை டன் ஒன்றிற்கு ரூ.2755/-

வீதம் நிலுவையின்றி சுமார் ரூ.57.98 கோடி கரும்பு கிரயத்தொகை அங்கத்தினர்களுக்கு

வழங்கப்பட்டுள்ளது.

ரூ.75.54 கோடியில் 15 மெகா வாட் மின் உற்பத்தி திட்டத்தினை விரைவுபடுத்தி பணியினை

முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆலை நவீனப்படுத்துதல் திட்டத்திற்கு ரூ.13.63

கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.116.00 கோடியில் எத்தனால்

தொழிற்சாலை அமைக்கும் திட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உற்பத்தியை தொடங்க

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆலைக்கு கரும்பு அனுப்பும் அங்கத்தினர்களை கொண்டு கூட்டம் நடத்த ஏதுவாக

ரூ.75.00 இலட்சம் மதிப்பீட்டில் கூட்ட அரங்கம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு

வருகிறது. கம்மாபுரம், குண்டவெளி மற்றும் கூவாகம் பிர்கா கரும்பு விவசாயிகளின் நீண்ட நாள்

கோரிக்கையினை ஏற்று அப்பகுதி கரும்பு விவசாயிகள் பயனடையும் வகையில் அப்பகுதிகளை

எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலையின் விவகார எல்லையாக மாற்றி அரசாணை

வழங்கப்பட்டுள்ளது.

கரும்பு வெட்டுக்கூலியை கட்டுப்படுத்த அரவைப்பருவத்திற்கு தமிழக அரசு வேளாண்

பொறியியல் துறை மூலம் கரும்பு வெட்ட இயந்திரம் ஏற்பாடு செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்டது.

எதிர்வரும் 2022-23 அரவைப் பருவத்திற்கு இயந்திரம் மூலம் கரும்பு வெட்ட கரும்பு வெட்டு

இயந்திரம் 50 சதவீதம் மானியத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

கரும்பு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வல்லுநர் விதை கொண்டு வந்து நடும்

அங்கத்தினர்களுக்கு ஒரு ஹெக்டருக்கு ரு.12,500/- மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. கரும்பு

ஆராய்ச்சி நிலையத்திலிருந்து திசு வளர்ப்பு நாற்று கொண்டு வந்து நடவு செய்யும்

அங்கத்தினர்களுக்கு ஒரு ஹெக்டருக்கு ரூ.90,000/- மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரு பரு

கருணை நாற்றுகள் மூலம் கரும்பு நடவு செய்யும் அங்கத்தினர்களுக்கு ஒரு ஹெக்டருக்கு

ரூ.11,000/-மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆலைக்கு இயந்திரம் மூலம் வெட்டி வரும் கரும்பை இறக்க ஏதுவாக தான்தூக்கி

ஹைட்ராலிக டிப்பர் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் 2022-23 அரவைப்பருவத்திற்கு நிறுவப்பட

உள்ளது. ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆளில்லா எடை மேடை நிறுவப்பட உள்ளது. ரூ.50.00

இலட்சம் மதிப்பீட்டில் ஆலையின் அரவைப் பகுதியினை தானியங்கி மயமாக்க நடவடிக்கை

மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் திரு.மா.செ.சிந்தனைசெல்வம்

அவர்கள்,கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் திரு.சிவமலர் அவர்கள், எம்.ஆர்.கே.கூட்டுறவு

சர்க்கரை ஆலை மாவட்ட வருவாய் அலுவலர் / மேலாண்மை இயக்குநர் திரு.சதீஷ் அவர்கள், தஞ்சாவூர்

அறிஞர் அண்ணா கூட்டுறவு சர்க்கரை ஆலை மாவட்ட வருவாய் அலுவலர் / மேலாண்மை இயக்குநர்

திருமதி.செந்தில்குமாரி மற்றும் எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலர்கள், உள்ளாட்சி

அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

வேளாண்மைத் துறை Relateted News