Loading . . .




MLA S.தங்கப்பாண்டியன் தலைமையில் முகவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

The Forecast 3 years ago விருதுநகர்

இராஜபாளையம் தொகுதியில்  (13.09.2022) மாலை 4 மணியளவில் சொக்கநாதன்புத்தூர் ஊராட்சியிலுள்ள  அரசு மேல்நிலைப்பள்ளியிலும் சேத்தூர் சேவுகப்பாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை மாணவ மாணவியர்களுக்கு    MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் சொக்கநாதன்புத்தூர் பள்ளியில்  பேசிய MLA அவர்கள், நமது தமிழக  மாணவ மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்க  நமது *தமிழக முதல்வர் அவர்கள்* பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறார், மேலும் எத்தனையோ பள்ளி நிகழ்ச்சி சென்றுருந்தாலும் சொக்கநாதன்புத்தூர் பள்ளியில் இன்று நடைபெற்ற யோகா, பேச்சு மற்றும் நடன நிகழ்ச்சி சிறப்பாக இருந்ததாக மாணவ மாணவியர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்தினார். மேலும் இப்பள்ளி சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கையான வகுப்பறைக்கட்டிடத்திற்கு *சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கி புதியதாக வகுப்பறைக்கட்டிடம்* கட்டித்தரப்படும்  எனக் கூறினார். அதுபோல் சேத்தூர் பள்ளியில் பேசிய MLA அவர்கள், பள்ளியில்  கலைநிகழ்ச்சி நடத்துவதற்கு *சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி கலையரங்கமும் மாணவ மாணவியர்கள் அமரும் இருக்கைகளும் வழங்கப்படும்* எனக்கூறினார். 

இந்நிகழ்வில் பள்ளி  தலைமை ஆசிரியர்கள் கற்பகம்மாள், சுந்தரராஜன் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன் ஒன்றிய துணை செயலாளர் குமார் மற்றும் கழக நிர்வாகிகள் மாணவ மாணவியர்கள் ஆசிரியப்பெருமக்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

விருதுநகர் Relateted News