அகில இந்திய தொழிற்தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றபயிற்சியாளர்களுக்கு பட்டம், பாராட்டு.
The Forecast 2 years ago தொழிலாளர் நலத்துறை
அகில இந்திய தொழிற்தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மூன்று
இடங்களை பெற்றபயிற்சியாளர்களுக்கு பட்டமளித்து பாராட்டு சான்றிதழை
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்
. சி.வி. கணேசன் அவர்கள் வழங்கினார்
தமிழ்நாட்டில் உள்ள தொழிற் வளத்தினை மேம்படுத்தி நமது மாநில
இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு 91 அரசு
தொழிற்பயிற்சி நிலையங்களும், 326 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் தற்போது
இயங்கி வருகின்றன. இவ்வாண்டு மேலும் 11 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் புதிதாக
துவங்கப்படவுள்ளன.
இந்த ஆண்டில் நடைபெற்ற அகில இந்திய தொழிற் தேர்வில் 15040 அரசினர்
தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு அதில் 90.83%
பயிற்சியாளர்கள் தேர்ச்சி பெற்றனர். இது சென்ற ஆண்டைவிட 10.89% கூடுதல் ஆகும்.
மேலும் இவர்களில் அகில இந்திய அளவில் 20 பேர் முதலிடமும், 17 பேர் இரண்டாம்
இடமும், 20 பேர் மூன்றாமிடமும் ஆக மொத்தம் 57 பேர் அகில இந்திய அளவிலான
தரவரிசைப்பட்டியலில் முன்னிலை
அளவிலான பயிற்சியாளர்கள் பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் அதிக
மின்கம்பியாள்
10 தொழிற்பிரிவுகளில் ஒன்றான
தொழிற்பிரிவில் முதலிடம் பெற்ற விருதுநகர், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய மாணவி
செல்வி முனீஸ்வரி புதுதில்லியில் 17.09.2022 அன்று நடைபெற்ற விழாவில் பாராட்டு
சான்றிதழ் வழங்கி ஒன்றிய அரசினால் கௌரவிக்கப்பட்டார். தரவரிசையில் இடம்பெற்ற
மற்ற 56 பயிற்சியாளர்களுக்கு கிண்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற
பட்டமளிப்பு விழாவில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை
அமைச்சர் . சி.வி. கணேசன் அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் தேசிய தொழிற்
சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு
இளைஞர்கள் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முதலமைச்சர்
அவர்கள் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில் 4.0 தரத்திலான திறன்
பூழிக்சிகட்டுள் வழங்கு இந்தவகைமயங்க ளிவழிபைல் நிறுங்களுந்த்து
இணைந்து தொழில் 4,0 தரத்திலான புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள்,
உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்கள் ஆகியவற்றை நிறுவுவதற்காக
ரூ.2877.43 கோடியும் நவீன இயந்திரங்களை நிறுவுவதற்கு ஏற்ற வகையில் கட்டங்கள்
கட்டுவதற்காக ரூ.264.83 கோடியும் ஒப்புதல் அளிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டு, பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது எனவும் தொழிலாளர்
நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் . சி.வி. கணேசன் அவர்கள்
தெரிவித்தார்.
இவ்விழாவில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை
அமைச்சர் . சி.வி. கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் . முகமது நசீமுதின், இ.ஆ.ப. வேலைவாய்ப்பு
மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு. கொ. வீரராகவ ராவ், இ.ஆ.ப.. அரசு உயர்
அலுவலர்கள், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள், பயிற்றுநர்கள் மற்றும்
பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments