கைது நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் எம்.எல்.ஏ,கட்சி நிர்வாகிககளை போலீசார் கைது செய்தனர். கைது செய்ததை கண்டித்து தேனி மாவட்டம் கம்பத்தில் முன்னாள் எம்.எல்.ஏ STK ஜக்கையன் தலைமையில் கம்பம் சிக்னல் முன்பு 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.எதிர்க்கட்சி தலைவரை விடுதலை செய்யக்கோரியும், திமுக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
0 Comments