எடப்படி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் துணை வேந்தர் பதவி ரூ.50 கோடி வரை விற்கப்பட்டதாக அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றசாட்டு சுமத்தி உள்ளார். தமிழகத்தில் 2017-2021ம் ஆண்டு வரை முதல்வராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடந்தது. இந்த காலக்கட்டத்தில் அரசு டெண்டர் கொடுப்பது, உயர் பதவிகளில் ஆட்களை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகளில் லஞ்சம் தலைவிரித்தாடியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக எடப்பாடி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
0 Comments