மழைநீர் வடிகால் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப, ஆய்வு
The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் அண்ணாநகர் மண்டலம்,
வார்டு103க்குட்பட்ட பர்னபி சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழ்நாடு
அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப, அவர்கள் (23.10.2022)
பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் .சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள், நெடுஞ்சாலை மற்றும் சிறு
துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் .பிரதீப் யாதவ், இ.ஆ.ப., அவர்கள், முதன்மைச்
செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப. அவர்கள், சென்னைப் பெருநகர் குடிநீர்
வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் .ஆர்.கிர்லோஷ் குமார், இஆப.,
அவர்கள், துணை ஆணையாளர் (பணிகள்) எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., அவர்கள், மத்திய வட்டார துணை
ஆணையாளர் .ஷேக் அப்துல் ரஹ்மான். இ.ஆ.ப., அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments