பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு, அ.தி.மு.க., சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசம் தனிநபருக்கு உரியது கிடையாது. இவ்விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை ஏற்போம்,'' என, மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு தெரிவித்தார்
மன்னர், மருதுபாண்டியர் நினைவு நாளுக்காக சிலைக்கு மரியாதை செய்த பின் அவர் கூறியதாவது:
மருது சகோதரர்களுக்கு அரசு விழா எடுத்தது, நினைவிடம் கட்டியது, மத்திய அரசை வலியுறுத்தி தபால் தலை வெளியிட்டது எல்லாம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான்.
பசும்பொன்னில் தேவர் சிலைக்கு தங்க கவசமும் செய்து கொடுத்தார். தற்போது அதை பெறுவதில் பிரச்சனை இருக்கிறது. 2017 லிலும் இது போன்ற நிலை வந்தபோது வங்கியில் இருந்த கவசத்தை மதுரை கலெக்டர் எடுத்து, ராமநாதபுரம் கலெக்டரிடம் கொடுத்தார்
இப்போது முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விலகியதால், அவருக்கு பதில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அ.தி.மு.க., பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கட்சி அலுவலக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வங்கியில் பணம் எடுக்க சீனிவாசன் தான் கையெழுத்திடுகிறார்.
தற்போது இவ்விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதால். இதுவரை பன்னீர்செல்வம் மட்டுமே கையெழுத்திட்டு வருவதால், அவருக்கு சொந்தமாகி விடாது. அக்., 26ல் நல்ல தீர்ப்பு வரும்
0 Comments