சென்னையின் பரப்பளவை விரிவாக்குவதற்காக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 1,225 கிராமங்கள் சென்னையுடன் இணைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு புறநகர் பகுதிகள் வளர்ந்து வருவதைத் தொடர்ந்து சென்னையின் பரப்பளவை விரிவாக்குவதற்கான முயற்சியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதற்காக இறுதிமுடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை தற்போது 1,189 சதுர கி.மீ பரப்பளவில் இருந்து 5,904 சதுர கிமீ பரப்பளவாக விரிவாக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
0 Comments