விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களின் குருபூஜைவிழா காளையார்கோவிலில் நேற்றுநடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நேற்று சமுதாயத் தலைவர்கள் சார்பில், விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களின் குருபூஜை நடைபெற்றது. இதையொட்டி அவர்களது நினைவிடத்தில் மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம்எம்பி, ஓபிஎஸ் அணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் அசோகன், செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
0 Comments