கிண்டியில் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று புதிய இயக்குநர் அலுவலகம்
The Forecast 3 years ago வேளாண்மைத் துறை
கிண்டியில் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று
புதிய இயக்குநர் அலுவலகம் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்தார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் திரு. எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள், 2021-2022 ஆம் ஆண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு, சென்னை, கிண்டி, ஈக்காட்டு தாங்கல், . வி. க. தொழிற்பேட்டை, சிறு தொழில் வளர்ச்சிக் கடிக வளாக இரண்டாம் தளத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குநர் அலுவலகத்தை திறந்து வைத்து, முழு அங்ககப்பண்ணை என உறுதிச் செய்யப்பட்ட 17 அங்கக விவசாயிகளுக்கு வாய்ப்புச் சான்றிதழ் வழங்கினார்.
அங்கக வேளாண்மை என்பது இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், களைக் கொல்லிகள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்தாமல் இயற்கை இடுப்பொருட்களை உபயோகப்படுத்தி சாகுபடி செய்யும் முறையாகும். இம்முறையில் நஞ்சில்லா உணவு விளைவிக்கப்பட்டு மண்வளம், மனிதவளம் மற்றும் இயற்கை சூழ்நிலை பாதுகாக்கப்படுகிறது.
தமிழ்நாடு அங்ககச் சான்றுத் துறை (TNOCD) 2007 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்துறையில் பதிவு செய்துள்ள அங்கக விவசாயிகளின் பண்ணைகள் அங்ககச் சான்று ஆய்வாளர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வாய்ப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாய்ப்புச் சான்றிதழ் மூலம் அங்கக விளைப்பொருட்களுக்கு கூடுதல் விலையும், உள்நாட்டு வணிகம்மட்டுமின்றி ஏற்றுமதி வாய்ப்புகளும் அதிக அளவில் கிடைக்கும்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட தனி நிதி நிலை அறிக்கையில், நஞ்சில்லா உணவு விளைவிக்கும் விவசாயிகளின் அங்ககவிளைப் பொருட்களில் உள்ள எஞ்சிய நச்சு மதிப்பீடு ஆய்வு செய்ய ஆகும் ஆய்வக கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கை செய்யப்பட்டது. அதன்படி ரூ.12.50 இலட்சம் (ரூபாய் பன்னிரெண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. இதன் மூலம் பகுப்பாய்வுமாதிரி ஒன்றுக்கு ஆகும் செலவான ரூ.4720/ யை வழங்கப்படுகிறது. முழு மானியமாக விவசாயிகளுக்கு அரசால் இவ்வாண்டு
தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறையில் முழு நிலையில் உள்ள அங்ககப் பண்ணை மற்றும் தற்போது மாறுதல் காலம் முடிவுற்று முழு அங்ககப் பண்ணை என்று அறிவிக்கப்படும் நிலையில் 264 பண்ணைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த அங்ககப் பண்ணைகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விளைப் பொருட்களில் இரசாயனங்களான பூச்சிக் கொல்லிகள், களைக்கொல்லி மற்றும் பூஞ்சாண கொல்லி ஆகியவையின் எஞ்சிய தன்மை பகுப்பாய்வு செய்யப்பட்டு, எஞ்சிய நச்சு இல்லை என்ற நிலையில் விஞ்ஞான பூர்வமாக முழு அங்கக நிலையில் உள்ள பண்ணை என மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு முழு அங்ககப் பண்ணை என உறுதிச் செய்யப்பட்ட 17 அங்கக விவசாயிகளுக்கு வாய்ப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
0 Comments