Loading . . .




மோடி வெள்ளை அறிக்கை வெளியிட அழகிரி வலியுறுத்தல்

The Forecast 3 years ago காங்கிரஸ்

பணமதிப்பிழனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டு மக்களுக்கு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கே.எஸ்., அழகிரி வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பு செய்து நேற்றோடு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. நாட்டு மக்களை கடும் துன்பத்திற்கு ஆளாக்கிய அறிவிப்பு வெளியிட்டு கடந்த ஆறு ஆண்டுகளில் இதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து ஆய்வு செய்தால் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் தான் மிஞ்சுகிறது. பணமதிப்பிழப்பினால் கள்ளப் பணம் ஒழிவதற்கு பதிலாக அதிகரித்துள்ளதை மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையே படம் பிடித்து காட்டுகிறது.  பிரதமர் மன்மோகன்சிங் கூறியபடி மோடியின் அறிவிப்பு திட்டமிட்ட கொள்ளை  என்று கூறினார். இத்தகைய பேரழிவுமிக்க அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி பணமதிப்பிழனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டு மக்களுக்கு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.


0 Comments

Post your comment here

காங்கிரஸ் Relateted News