2022-23ஆம் ஆண்டிற்கான துறை மானியக் கோரிக்கையின் போது, ஆதிதிராவிடர் நலத் துறை வெளியிட்ட அறிவிப்பு.
The Forecast 3 years ago TS. ஜவகர் இ.ஆ.ப.,
“அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலைப்
பட்டப்படிப்பு பயின்று வரும் 7,800 ஆதிதிராவிட மாணாக்கர் மற்றும் 2400 பழங்குடியின
மாணாக்கர் என மொத்தம் 10,000 மாணாக்கருக்கு வேலைவாய்ப்புத் தேர்வுகளை
எதிர்கொள்ளத் தேவையான மொழித்திறன் (Communication Skillis), திறனறித் தேர்வுகள்
(Verbal & logical reusoning and Aptitude tests) மற்றும் குழு விவாதம் (Group discussion) ஆகிய
இனங்களில் Aspiring Minds Computer Adaptive Test (AMCAT) பயிற்சிகள் தொழில் நுட்பக்
கல்வி இயக்ககம் மூலம் ரூ.10.00 கோடி செலவில் வழங்கப்படும்."
2. மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்துவது தொடர்பாக, மேலே படிக்கப்பட்ட
தாட்கோ மேலாண்மை இயக்குநரின் கருத்துருவில், All India Survey of Higher Education
(AISHE) 2019 2020 ஆம் நிதியாண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் உயர் கல்வியில் சுமார்
6 இலட்சம் ஆதிதிராவிட மாணாக்கர்கள் மற்றும் 35,000 பழங்குடியின மாணாக்கர்கள் உயர்
கல்வி பயின்று வருகிறார்கள். இவற்றில் 3இல் ஒரு பங்கு மாணாக்கர்கள் முதல்
4.இல் 1 பங்கு மாணாக்கர்கள் வரை இறுதி ஆண்டு பயின்று வருகிறார்கள் என்றும் பல்வேறு
தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பல்வேறு நிலை அலுவலர்களை,
சம்மந்தப்பட்ட கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தி
தேர்வு செய்வதால் கல்லூரிகளில் படிக்கும் UG/PG மாணாக்கர்களுக்கு இறுதி ஆண்டிலேயே
Communication Skill Logical Reasoning, Apptitude Test, Verbal Reasoning and Group Discussion
ஆகியவற்றிலும், AMCAT எனப்படும் Aspiring Minds Computer Adaptive Test பயிற்சி
வழக்கும்போது மாணாக்கர்களுக்கான வேலைவாய்ப்புத் திறன் பெறுவது அதிகரிக்கின்றது
என்று குறிப்பிட்டுள்ளார்.
3 மேலும் இத்திட்டத்தின் பயன்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல்
கல்லூரி இறுதி ஆண்டு மாணாக்கர்கள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக்
கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணாக்கர்கள் மற்றும் அரசு கலை அறிவியல்
கல்லூரி அரசு நிதியுதவி பெறும் கல்லூரி மாணாக்கர்களுக்கு இப்பயிற்சிகளை Science
Technology Engineering and Mathematics Program) வழங்கவும், இத்திட்டத்தினை அண்ணா
பல்கலைக்கழகம், தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், கல்லூரி கல்வி இயக்ககம் மூலம், குழு
அமைத்து வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தவும் தாட்கோ மேலாண்மை
இயக்குநர் அனுமதி கோரியுள்ளார்.
4. மேலும் இத்திட்டத்தின் கீழ் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் வாயிலாக 4000
மாணவர்களும் (ஆதிதிராவிடர் 3000 மற்றும் பழங்குடியினர் 1000 நபர்கள்) அண்ணா
பல்கலைக் கழகம் வாயிலாக 4000 மாணவர்களும் (ஆதிதிராவிடர் 3000 மற்றும்
பழங்குடியினர் 1000 நபர்கள்) கல்லூரி கல்வி இயக்ககம் வாயிலாக 2000 மாணவர்களும்
(ஆதிதிராவிடர் 1000 மற்றும் பழங்குடியினர் 400 நபர்கள் பயிற்சி அளிக்கலாம் எனவும்
தாட்கோ மேலாண்மை இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.
5.இத்திட்டத்தினை செயல்படுத்திட 7600 ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு, ஒரு
நபருக்கு ரூ.10,000 என்ற கட்டணத்தில் ரூ.7,60,00,000/- ஒன்றிய அரசு நிதியினை
பயன்படுத்திக்கொள்ள அனுமதியும், மேலும், 2400 பழங்குடியின மாணாக்கர்களுக்கு ஒரு
நபருக்கு ரூ.10,000/ என்ற கட்டணத்தில் ரூ.240,00,000, மாநில அரசு நிதியிலிருந்து
வழங்குமாறு மேலாண்மை இயக்குநர், தாட்கோ அரசைக் கோரியுள்ளார்.
6. தாட்கோ, மேலாண்மை இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமாக
பரிசீலித்து, 7600 ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு, ரூ.7,60,00,000 ரூபாய் ஏழு கோடியே
அறுபது இலட்சம் மட்டும்) ரூ.10,000x 7500 நபர்கள் மானியமாக ஒன்றிய அரசு
நிதியிலிருந்து செலவிட நிருவாக அனுமதி வழங்கியும் மற்றும் 2400 பழங்குடியினருக்கு
ரூ.240,00,000(ரூபாய் இரண்டு கோடியே நாற்பது இலட்சம் மட்டும்) ரூ.10,000 2400 நபர்கள்)
மாநில அரசு நிதியிலிருந்தும் பெற்று வழங்க நிருவாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி
அரசு ஆணையிடுகிறது.
7.இத்திட்டத்தினை செயல்படுத்த இணைப்பில் உள்ள வழிகாட்டி நெறிமுறைகளை
பின்பற்றுமாறும் தமிழ்நாடு திறன் பயிற்சி நிறுவனம் (Tamil Nadu Skill Development Corporation)
வாயிலாக இப்பயிற்சியை வழங்கப்படும்.
2
மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மட்டுமின்றி
பழங்குடியினர் நலப்பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள்
நிறுவப்படும், அதற்கு தேவையான உட்கட்டமைப்புக்கு, கூடுதலாக நிதி
ஒதுக்கித் தரப்படும்.
2. மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட ஆதிதிராவிடர் நல ஆணையரின்
கருத்துருவில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ். 108 ஆதிதிராவிடர் நல
உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 98 ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகள்
செயல்பட்டு வருகின்றன என்றும், இவற்றுள் 87 பள்ளிகள் நீங்கலாக ஏனைய
பள்ளிகளில் அறிவுத் திறன் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும், ELCOT
மூலம் அறிவுத் திறன் வகுப்பறைகள் ஏற்படுத்த விலைப்புள்ளி அறிக்கை
கோரப்பட்டு பெறப்படவில்லை என்றும், இதனைத் தொடர்ந்து
பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படுத்தப்பட்ட / அறிவுத்திறன் வகுப்பறைகள் குறித்து
ஆய்வு செய்யப்பட்டது என்றும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும்
பள்ளிகளில் அறிவுத் திறன் வகுப்பறைகளுக்கு மாற்றாக அறிவுத்திறன் பலகைகள்
(Smart Boards) தனியார் நிறுவனத்தின் வாயிலாக அமைக்கப்பட்டு செயல்பட்டு
வருவதாகவும், ஒரு பள்ளிக்கு ரூ.2,25,000/- மதிப்பீட்டில் அறிவுத்திறன் பலகை
(SMART BOARDS) ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிக்கல்வித்துறையைப் பின்பற்றி, இத்துறையில் அறிவுத்
திறன் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படாத 87 உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில்
அறிவுத்திறன் வகுப்பறைகள் ஏற்படுத்தலாம், இதன் பொருட்டு ஒரு பள்ளிக்கு
ரூ.2,25,000/-மும் இச்செலவினம் நீங்கலாக மர தளவாடங்கள் (Wooden Chairs)
இணைய வசதி இணைப்பு மற்றும் வகுப்பறை வண்ணம் பூசி புதுப்பித்தல் (Civil
Infrastructure works and painting) உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பினை
ஏற்படுத்திட ஒரு பள்ளிக்கு ரூ.1,20,000/-மும் கூடுதலாக தேவைப்படும் என்று
தெரிவித்து, ஒரு பள்ளிக்கு அறிவுத்திறன் வகுப்பறைகள் ஏற்படுத்த மொத்தம்
ரூ.3,45,000/- வீதம் 87 ஆதிதிராவிடர் நல உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுக்கு
அறிவுத்திறன் பலகைகள் ஏற்படுத்த ரூ.3,00,15,000/- செலவினம் ஏற்படும் என்று
தெரிவித்துள்ளார். மேலும் அறிவுத் திறன் வகுப்பறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு
பயிற்சி அளிக்க ரூ.200,000/- செலவினம் ஏற்படும் .
“வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தேவையான
உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தபட்ட கற்பிக்கும் திறன் ஆகிய
வசதிகளுடன் காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கம், திருச்சி மாவட்டம் - காட்டூர்.
திருவாரூர் மாவட்டம் - திருவாரூர் ஆகிய இடங்களில் இயங்கும் மூன்று
ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம்
பேச்சிப்பாறை, நீலகிரி மாவட்டம் குஞ்சப்பனை, சேலம் மாவட்டம்
வெள்ளிக் கவுண்டனூர் ஆகிய இடங்களில் இயங்கும் மூன்று பழங்குடியினர்
உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 6 பள்ளிகள், ஆங்கில
மொழிப் பயிற்சி, உயர் தொழில்நுட்ப ஆய்வகம், அறிவுத்திறன் வகுப்பறைகள்,
போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி ஆகிய சிறப்பம்சங்களுடன் கூடிய மாதிரிப்
பள்ளிகளாக ஒரு பள்ளிக்கு தலா ரூ.271 கோடி வீதம் மொத்தம் ரூ.16.26 கோடி
செலவில் தரம் உயர்த்தப்படும்”.
2. மேலே முதல் மற்றும் இரண்டாவதாக படிக்கப்பட்ட ஆதிதிராவிடர் நல
இயக்குநர் மற்றும் பழங்குடியினர் நல இயக்குநர் ஆகியோரின் கருத்துருக்களில்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களை பொறியியல், மருத்துவம்
மற்றும் ஆராய்ச்சி சார்ந்த படிப்புகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும்
வகையில், ஆதிதிராவிடர் நல மாதிரி பள்ளிகள் தோற்றுவித்தல் அவசியமாகின்றது
என்று தெரிவித்து, கீழ்க்கண்ட 6 இடங்களில் ஆதிதிராவிடர் நல மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலை மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தலாம்
என்று தெரிவித்துள்ளனர்:
ஆதிதிராவிடர் நல மேல்நிலை மாதிரிப் பள்ளிகள்
1. அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, கடம்பன்குளம், திருநெல்வேலி,
(திருச்சி மாவட்டம், காட்டூர் பள்ளிக்கு மாற்றாக)
2. அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, நாகல்கேணி, செங்கல்பட்டு
(திருவாரூர் மாவட்டம், திருவாரூர் பள்ளிக்கு மாற்றாக)
3. அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, ஈஞ்சம்பாக்கம், காஞ்சிபுரம்.
அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலை மாதிரி பள்ளிகள்
1. கள்ளக்குறிச்சி மாவட்டம்
பேச்சிப்பாறை பள்ளிக்கு மாற்றாக)
2. நீலகிரி மாவட்டம் குஞ்சப்பணை,
3. சேலம் மாவட்டம் வெள்ளிக் கவுண்டனூர்
இன்னாடு, (கன்னியாகுமரி மாவட்டம்
மேலும் மேற்கண்ட பள்ளிகளை மாதிரிப் பள்ளிகளாக மாற்ற போதுமான
வகுப்பறைகள், விளையாட்டுத்திடல், ஆண், பெண் விடுதி வசதிகள் போன்ற
முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்று தெரிவித்து மாதிரிப் பள்ளிகளில்
செய்யப்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்பு, வழங்கப்படும் பயிற்சி மற்றும்
இவற்றிற்கான செலவின விவரங்களை ஆதிதிராவிடர் நல இயக்குநர் மற்றும்
பழங்குடியினர் நல இயக்குநர் பின்வருமாறு தெரிவித்துள்ளனர்;-
(அ) மாணாக்கர் சேர்க்கை
2022-2023 ஆம் கல்வியாண்டில் மாதிரிப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு
வரை கல்விப் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களும் மாதிரிப்
பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். எதிர்வரும் 2023-2024 ஆம்
கல்வியாண்டில் மாணாக்கர்களுக்கு திறனறி தேர்வு நடத்தி மாணாக்கர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவர். ஆதிதிராவிடர் நல / பழங்குடியினர் நல
மாணாக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
(ஆ)மாணாக்கர்களின் எண்ணிக்கை,
ஒவ்வொரு வகுப்பிற்கும் தமிழ்வழி கல்வியில் 30 (15 ஆண்கள் மற்றும்
15 பெண்கள்) மாணாக்கர்கள், ஆங்கிலவழி கல்வியில் 30 (15 ஆண்கள்
மற்றும் 15 பெண்கள்) மாணாக்கர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள்.
) ஆங்கில மொழி பயிற்சி
6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு
ஆங்கிலத்தில் சரளமாக பேசும் வகையில் வாரத்திற்கு மூன்று நாட்கள்
தினசரி ஒரு மணி நேரம் வீதம் ஆங்கிலத்தில் புலமை மிக்க ஆசிரியர்களைக்
கொண்டு ஆங்கிலத்தில் பேச பயிற்சி (Spoken English Training) அளிக்கப்படும்.
(ஈ) தேர்வுகளுக்கு ஆயத்தப்படுத்துதல்
9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு
போட்டித் தேர்வுகளில் பங்குபெறும் வகையிலும் வாரத்திற்கு மூன்று
நாட்களுக்கு தினசரி ஒரு மணி நேரம் வீதம் அறிவியல், கணிதம் மற்றும்
கலைப்பிரிவு பாடத்தில்
பயிற்சி அளிக்கப்படும்.
(உ)தங்குமிடம்
ஆதிதிராவிடர் நல மாதிரி மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள்
தங்கிப்பயிலும் வகையில் பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள
ஆதிதிராவிடர் நல ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகள் இப்பள்ளியுடன்
இணைக்கப்படும். மாணவ/ மாணவியர்கள் விடுதியில் தங்குவது
கட்டாயமில்லை.
(ஊ) உயர் தொழிற்நுட்ப ஆய்வகம் (Hi-Tech Lab),
பயிலும்
ஆதிதிராவிடர் நல மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில்
மாணாக்கர்களுக்கு உயர்தொழில்நுட்ப ஆய்வகம் மூலமாக வினாடி
வினாக்கள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.
இரண்டு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மூன்று
பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிகளில் உயர்
தொழில்நுட்ப ஆய்வகம் உள்ளன.
(எ) அறிவுத்திறன் வகுப்பறைகள் (Smart Class Room)
3 ஆதிதிராவிடர் நல / 3 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மாதிரி
மேல்நிலைப் பள்ளிகளையும் ஒருங்கிணைத்து, அறிவுத்திறன்
வகுப்பறைகள் மூலமாக சிறந்த பாட ஆசிரியர்களை கொண்டு பாடங்கள்
நடத்தப்படுவதோடு பயிற்சியும் அளிக்கப்படும். மேற்கண்ட ஆறு
பள்ளிகளிலும் அறிவுத்திறன் வகுப்பறைகள் உள்ளது.
(ஏ) விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகள்.
ஆதிதிராவிடர் நல / அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மாதிரி
மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு அவர்களின்
திறமைக்கு ஏற்ப விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி அளித்து மாவட்டம்
மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெற வழிவகை
செய்யப்படும்.
(ஐ) சிறப்பாசிரியர்களுக்கு தொகுப்பூதியம்
6ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை சிறப்பு பயிற்சி அளிக்கும்
வகையில் காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு பயிற்சி அளிக்கவும்
வார, மாத தேர்வுகள், பருவ தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள், தேர்வு எழுத
சிறப்பு பயிற்சி அளிக்க சிறப்பாசிரியர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.10,000/-
வீதமும், 11-ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு சிறப்பு
பயிற்சி அளிக்கும் சிறப்பாசிரியர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.12,000/-
வீதமும், 11 மாதங்களுக்கு வழங்கப்படும். மேலும் இப்பள்ளிகளுக்கு தலா
ஒரு அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் பணியிடங்கள்
தோற்றுவிக்கப்படும்.
(ஓ)விடுதி உணவு கட்டணம்.
ஆதிதிராவிடர் நல மாதிரி மேல்நிலைப்பள்ளியுடன் இணைக்கப்படும்
விடுதியில் தங்கி பயிலும் மாணாக்கர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு
வரும் உணவு கட்டணத்துடன் சேர்த்து சிறப்பு உணவு கட்டணமாக தலா
ரூ.500/- வீதம் கூடுதலாக வழங்கப்படும்.
(ஓ) அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல்
மாதிரிப் பள்ளிகளுக்கான
ஏற்படுத்துதல், கழிவறைமைதானம், அறிவியல் கட்டடங்களைப் புதிப்பித்தல், நூலக வசதி
கட்டடங்கள் ஆய்வக மேம்பாடு, கணினி வாங்குதல்,அமைத்தல், விளையாட்டு
இணையதள வசதி, குடிநீர் வசதி, அலுவலக எழுதுபொருள் செலவினம்,
அறைகலன் கொள்முதல், சூரிய மின்சக்தி கட்டமைப்பு, மின்சாதனங்கள்
வாங்குதல் NEET உள்ளிட்ட தேர்வுகளுக்கு விரிவுரையாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.
சிறப்பு மற்றும்
மேற்படி, 3 ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளை மாதிரிப் பள்ளிகளாக தரம்
உயர்த்த ரூ. 7,81,76,740/-மும், 3 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்
பள்ளிகளை மாதிரிப் பள்ளிகளாக தரம் உயர்த்த ரூ.7,00,36,740/-மும் விடுவிக்குமாறு
முறையே ஆதி திராவிடர் நல இயக்குநர் மற்றும்
இயக்குநர்அரசுக்கு பரிந்துரைத்தனர்.
பழங்குடியினர் நல
3. மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின்
அறிவிப்பினை செயல்படுத்துவதற்கு ஏதுவாக ஆதிதிராவிடர் நல இயக்குநர் மற்றும்
பழங்குடியினர் நல இயக்குநரின் கருத்துருக்களை பரிசீலனை செய்ததன்
அடிப்படையில், (1) திருநெல்வேலி மாவட்டம், கடம்பன்குளம் (2) செங்கல்பட்டு
மாவட்டம், நாகல்கேணி (3) காஞ்சிபுரம் மாவட்டம், ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில்
செயல்படும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளை, ரூ.7,81,76,740/- (ரூபாய்
ஏழு கோடியே எண்பத்தொரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து எழுநூற்று நாற்பது
மட்டும்) மதிப்பீட்டில் மாதிரிப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும், இதேபோன்று
(1) கள்ளக்குறிச்சி மாவட்டம், இன்னாடு, (2) நீலகிரி மாவட்டம், குஞ்சப்பணை,
(3) சேலம் மாவட்டம், வெள்ளிக் கவுண்டனூர் ஆகிய மூன்று இடங்களில் செயல்படும்
அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிகளை, ரூ.7,00,36,740/-
(ரூபாய் ஏழு கோடியே முப்பத்தாறாயிரத்து எழுநூற்று நாற்பது மட்டும்) மதிப்பீட்டில்
ஆக மொத்தம் ரூ.14,82,13,480/- (ரூபாய் பதினான்கு கோடியே எண்பத்தி இரண்டு
இலட்சத்து பதிமூன்றாயிரத்து நானூற்று எண்பது
மாதிரிப் பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கு நிருவாக அனுமதி வழங்கி அரசு மட்டும்) மதிப்பீட்டில் ஆணையிடுகிறது.
0 Comments