Loading . . .




விருதுநகர் வெடி விபத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

The Forecast 3 years ago விருதுநகர்

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து சம்பவத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் கடந்தாண்டு ஏப்ரலில் நடந்த கோர விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், பட்டாசு விபத்தில் பலியான ஒவ்வோரு குடும்பத்துக்கும் நிவாரண தொகையாக தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.


அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், ‘விபத்தில் பலியானவர்களுக்கு உரிய நிதிஉதவியை மாநில அரசு வழங்குகிறது. இவ்விசயத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தலையிட முடியாது. மக்களின் வரிப்பணத்தில் தான் நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது’ என்றார். அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘தமிழக அரசின் வாதத்தை நீதிமன்றம் புரிந்து கொள்கிறது. இருந்தும் விதிமுறைகளை தளர்த்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரண நிதிஉதவி வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்றனர். தொடர்ந்து தற்போது தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாய பதிவாளர் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.


0 Comments

Post your comment here

விருதுநகர் Relateted News