Loading . . .




அரசு அலுவலர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கைகள், அலுவலக நடைமுறைகள் குறித்த முன்னோடி மற்றும் குறுகிய கால பயிற்சி

The Forecast 3 years ago நாமக்கல்

24.11.2022 நாமக்கல் மாவட்ட தொழில்மைய அலுவலக கூட்டரங்கில் அரசு அலுவலர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கைகள், அலுவலக நடைமுறைகள் குறித்த முன்னோடி மற்றும் குறுகிய கால பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் .ஸ்ரேயா பி. சிங். இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார்.


நாமக்கல் மாவட்ட தொழில்மைய அலுவலக கூட்டரங்கில் அரசு அலுவலர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கைகள், அலுவலக நடைமுறைகள் குறித்த முன்னோடி மற்றும் குறுகிய கால பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஸ்ரேயா பி. சிங்., இ.ஆ.ப அவர்கள்  23.11.2022) தொடங்கி வைத்தார்.


இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது.

நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் / பணியாளர்களுக்கு 21.11.2022 முதல் 25.11.2022 வரை 3 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பினை தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை சார்பாக சென்னை மனிதவள மேலாண்மைத் துறையின் அரசுதுணைச் செயலாளர், ஆய்வு அலுவலர் மற்றும் பிரிவு அலுவலர்கள், உதவி பிரிவு அலுவலர்களால் ஒழுங்கு நடவடிக்கைகள். அலுவலக நடைமுறைகள் குறித்த முன்னோடிமற்றும் குறுகிய கால பயிற்சி வழங்கபடவுள்ளது. முன்னோடிப் பயிற்சியானது தமிழக அரசின் அனைத்துத் துறைகளைச் சார்ந்த மாவட்ட அலுவலர்கள் / நேர்முக உதவியாளர்கள் நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 23.11.2022 ஒரு நாள் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்பில் "ஒழுங்கு நடவடிக்கைகள்" குறித்து விரிவாக எடுத்துரைக்க உள்ளார்கள்.

குறுகியகாலப் பயிற்சியானது தமிழக அரசின் அனைத்து துறைகளைச் சார்ந்த

அலுவலகங்களில் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள் / துணை வட்டாட்சியர்கள் மற்றும் தேர்வுநிலை உதவியாளர் நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 24.11.2022 மற்றும் 25.11.2022 வரையிலான 2 நாட்கள் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் (பணி நிபந்தனைகள் சட்டம் 2016) குறித்து விரிவாக விளக்க உள்ளார்கள்.

இந்த பயிற்சியானது அரசுப்பணியாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியாகும். அரசு அலுவலர்கள் அலுவலக நிர்வாகத்தில் தங்களது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளவும். அலுவலக நடைமுறைகளை திறம்பட தெரிந்துகொள்ளவும் இப்பயிற்சி உதவும்.

இப்பயிற்சியினை அனைத்து அலுவலர்களும் நன்முறையில் பயன்படுத்தி உங்களது அலுவலகத்தை மேலும் திறமையாக மேம்படுத்திட வேண்டும். இப்பயிற்சியில் தங்களது அனுபவங்களை தங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியார்களுடன் பகிர்ந்துகொண்டு அவர்களையும் நல்ல திறமையான ஆளுமை பெற்றவர்களாக உருவாக்கி மாவட்ட நிர்வாகத்தினை மேம்படுத்துமாறும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆய்வு குழு அலுவலர் .அபிநயா. மனித வள மேலாண்மைத்துறை (சென்னை) அரசு துணை செயலாளர் .ஹரிகிருஷ்ணன், பிரிவு அலுவலர் திரு.ஜெய்சன் செல்வகுமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



0 Comments

Post your comment here

நாமக்கல் Relateted News