Loading . . .




சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை திட்டம் தலைமைச் செயலாளர் முனைவர் வெ இறையன்பு இ.ஆ.ப. ஆய்வு

The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் மண்டலத்தில் அடையாற்றின் இருபுறங்களிலும் மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுதளம் அருகே உள்ள மேம்பாலம் முதல் நந்தம்பாக்கம் பாலம் வரை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டப் பணியை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள்  (27.11.2022) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் . சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள், முதன்மைச் செயலாளர்/ ஆணையாளர் . ககன்தீப் சிங்பேடி, இ. ஆ.ப., அவர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் . ஆர். கிர்லோஷ் குமார்,இ.ஆ.ப., அவர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.


0 Comments

Post your comment here

வெ. இறையன்பு இ.ஆ.ப. Relateted News