ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு
The Forecast 3 years ago TS. ஜவகர் இ.ஆ.ப.,
சென்னை தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் .என். கயல்விழி செல்வராஜ் அவர்கள் தலைமையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் . உமதிவாணன் அவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் . தென்காசி சு ஜவஹர், இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் .த.ஆனந்த், இ.ஆ.ப., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் .சு.பழனிச்சாமி, இ.ஆ.ப., தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் .க.ச.கந்தசாமி, இ.ஆ.ப. மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments