Loading . . .




தஞ்சை தலைமை அஞ்சலகத்தில் சிறந்த தபால்காரருக்கு விருது வழங்கல்

The Forecast 3 years ago அஞ்சலக செய்திகள்

தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் ஒவ்வொரு மாதமும் சிற்ப்பாக செயல்படும் சிறந்த தபால்காரர்களுக்கு விருது' வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தலைமை அஞ்சலகத்தை சார்ந்த தபால்காரர் அ. சரணசிங் என்பவருக்கு நவம்பர் 2022 மாதத்திற்கான விருது' வழங்கப்பட்டது. 

தஞ்சை தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சலக தலைவர் அருள்தாஸ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சரணசிங் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து விருதினை வழங்கி பாராட்டி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் தலைமை அஞ்சலகத்தின்  துனை அஞ்சலக தலைவர் குழந்தைராஜ் மற்றும் அஞ்சலக ஊழியர்கள் சரவணன் தேவிசௌத், வெங்கடேஷ், சுமதி கமலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

அஞ்சலக செய்திகள் Relateted News