ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பல லட்சங்களில் நூலகம்.
The Forecast 3 years ago TS. ஜவகர் இ.ஆ.ப.,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எண்ணத்திற்கு உருகொடுக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2022-2023 - ஆம் ஆண்டிற்கான வரவு – செலவு கூட்டத் தொடரில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் .என்.கயல்விழி செல்வராஜ் அவர்களால் கீழ்க்காணும் அறிவிப்பு வெளியிட்டப்பட்டது:-
“ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியர் தங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் பொருட்டும் 25 விடுதிகளில் நூலகங்கள் மற்றும் இணைய வழியில் படிப்பதற்கு ஏதுவாக 25 விடுதிகளில் இணையவழி நூலகங்கள் (e-Library) என மொத்தம் 50 விடுதிகளில் ரூ.70.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக நூலகங்கள் அமைக்கப்படும்.’’
மேற்படி அறிவிப்பினை நிறைவேற்றும் பொருட்டு 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் (25 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் (Manual Library) + 23 ஆதிதிராவிடர் நல விடுதிகள் + 2 பழங்குடியினர் நல விடுதிகளில் (e - Library)) நூலகங்களை அமைக்க நிருவாக அனுமதியும், இதற்கான செலவினம் ரூ.69,95,850/- (ரூபாய் அறுபத்தொன்பது இலட்சத்து தொன்னூற்று ஐந்தாயிரத்து எண்ணூற்று ஐம்பது மட்டும்) ஒப்பளிப்பு செய்து அரசாணை (நிலை) எண். 112, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந4(2)) துறை, நாள். 24.11.2022-இல் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படும்.
0 Comments