அரசின் மின்னணு வேளாண் இயக்கம் (Digital Agriculture Mission) தொடர்பாக வேளாண் அடுக்குத் திட்டத்தின் (AgriStack) வழிகாட்டல் குழுவின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் குழுக் கூட்டம்
The Forecast 3 years ago வெ. இறையன்பு இ.ஆ.ப.
அரசின் மின்னணு வேளாண் இயக்கம் (Digital Agriculture Mission) தொடர்பாக வேளாண் அடுக்குத் திட்டத்தின் (AgriStack) வழிகாட்டல் குழுவின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் குழுக் கூட்டம்
(21.12.2022) தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அரசின் மின்னணு வேளாண் இயக்கம் (Digital Agriculture Mission) தொடர்பாக வேளாண் அடுக்குத் திட்டத்தின் (AgriStack) வழிகாட்டல் குழுவின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் . நா. முருகானந்தம், இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், இ.ஆ.ப., தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு முதன்மைச் செயலாளர் . நீரஜ் மிட்டல், இ.ஆ.ப., வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அரசு செயலாளர் .சி.சமயமூர்த்தி, இ.ஆபபு நில அளவை ஆணையர் திரு. டி.ஜி.வினய், இ.ஆ.ட, வேளாண்மை இயக்குநர் .ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் ஆர். பிருந்தாதேவி, இ.ஆ.ப, நிதித்துறை கூடுதல் செயலாளர் ஜி.கே.அருண்சுந்தர் தயாளன், இ.ஆ.ப., காணொளி காட்சி வாயிலாக ஒன்றிய அரசின் சார்பில் இயக்குநர் (மின்னணு வேளாண்) திரு.ராகேஷ் குமார் திவாரி, இ.ஆ.ப., மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments